கோவில்பட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
அ.தி.மு.க. சார்பில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலராக வெற்றி பெற்று, பஞ்சாயத்து யூனியன் தலைவரான கஸ்தூரி சுப்புராஜ் சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவியை ராஜினாமா செய்யக் கோரியும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இனாம் மணியாச்சி சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்பு ராஜ், வினோபாஜி, கருப்பசாமி, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story