ரேஷன் அரிசி கடத்தல் எதிரொலி தூத்துக்குடி அரிசி குடோன்களில் போலீசார் சோதனை


ரேஷன் அரிசி கடத்தல் எதிரொலி தூத்துக்குடி அரிசி குடோன்களில் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 22 Jun 2021 7:59 PM IST (Updated: 22 Jun 2021 7:59 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் அரிசி கடத்தல் சம்பவத்தை முன்னிட்டு தூத்துக்குடியிலுள்ள அரிசி குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி:
ரேஷன் அரிசி கடத்தல் சம்பவத்தை முன்னிட்டு தூத்துக்குடியிலுள்ள அரிசி குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
ரேஷன்அரிசி கடத்தல்
தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தல் அரசு குடோன்களில் இருந்தே நடக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து உணவு பாதுகாப்புதுறை செயலர் ஆனந்தகுமார், உணவுதுறை அமைச்சர் சக்ரபாணி ஆகியோர் குடோன்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து குடிமை பொருள் குற்றபுலனாய்வு கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமார் தமிழகம் முழுவதும் உள்ள குடோன்களில் சோதனை நடத்த குடிமைபொருள் குற்றபுலானாய்வு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
சோதனை
இதனையடுத்து தூத்துக்குடியில் குடிமைபொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீதூத்துக்குடி துறைமுகம் அருகே உள்ள அரசு குடோன் மற்றும் குறுக்குசாலையில் உள்ள கூட்டுறவுதுறை குடோன்கள் மற்றும் அவற்றின் அலுவலகங்கள் ஆகியவற்றில் இந்த சோதனை நடந்தது. அப்போது போலீசார் ரேசன் அரிசி கையிருப்பு பதிவேடுகள், வினியோக பதிவேடுகள் மற்றும் ரேஷன் பாமாயில் போன்ற பொருட்கள் இருப்பு உள்ளிட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.
மேலும் மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு குடோன்களையும் போலீசார் ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

Next Story