சிதம்பரத்தில் வாகனம் மோதி தொழிலாளி சாவு


சிதம்பரத்தில் வாகனம் மோதி தொழிலாளி சாவு
x

சிதம்பரத்தில் வாகனம் மோதி தொழிலாளி உயிாிழந்தாா்.


சிதம்பரம், 

 சிதம்பரம் அருகே உள்ள கீழமூங்கிலடி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 40). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சிதம்பரத்துக்கு வந்து கொண்டிருந்தார். வயலூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதியது.

 இதில் படுகாயமடைந்த சந்திரமோகனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சந்திரமோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story