வேப்பனப்பள்ளி அருகே தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை
வேப்பனப்பள்ளி அருகே தனியார் பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே தனியார் பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் பள்ளி ஆசிரியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பெரிய மணவாரனப்பள்ளியை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 29). இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் ஹரீஷ் வீட்டில் இருந்தார். மேலும் அவர் நண்பர்களுடன் சேர்ந்து வெளியே சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதுகுறித்து பெற்றோர் தட்டி கேட்டனர். இதனால் மனம் உடைந்த ஆசிரியர் ஹரீஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story