வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 22 Jun 2021 5:40 PM GMT (Updated: 2021-06-22T23:10:49+05:30)

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

ஆவூர், ஜூன்.23-
குளத்தூர் தாலுகா, மாத்தூர் கைனாங்கரையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு  திருச்சி-புதுக்கோட்டை சாலையில் ஆவூர் பிரிவு ரோட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து 2 பேர் வந்தனர். அவர்கள் கைனாங்கரை நாகராஜ் நீங்கள் தானா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஆம் என்றவுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த நபர் திடீரென அரிவாளால் நாகராஜை வெட்டி விட்டு தப்பினர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story