முதல் அமைச்சரால் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும்
முதல்-அமைச்சரால் பெறப்பட்ட மனுக்கள் மீது இம்மாத இறுதிக்குள் தீர்வு காண வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுத்தல் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 26,659 மனுக்களில் இதுவரை 3,261 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் அனைத்தும் நேரடியாக முதல்-அமைச்சரால் பெறப்பட்ட மனுக்கள் என்பதால் இதில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மனுக்கள் மீது தீர்வு
மேலும் இந்த மாத இறுதிக்குள் அனைத்து மனுக்கள் மீதும் தீர்வு காண வேண்டும் என்று அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பெருமாள், உதவி கலெக்டர் (பயிற்சி) ரூபினா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story