கார் மோட்டார் சைக்கிள் மோதல் முதியவர் பலி


கார் மோட்டார் சைக்கிள் மோதல் முதியவர் பலி
x
தினத்தந்தி 22 Jun 2021 5:51 PM GMT (Updated: 2021-06-22T23:21:13+05:30)

உளுந்தூர்பேட்டை அருகே கார் மோட்டார் சைக்கிள் மோதல் முதியவர் பலி

உளுந்தூர்பேட்டை

கடலூர் மாவட்டம் மாவிடந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லாம்பாஷா(வயது 60). இவர் நேற்று சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டைக்கு வந்து விட்டு மீண்டும் மாவிடந்தல் நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டையை அடுத்த ஏ.சாத்தனூர் கிராமம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அஸ்லாம்பாஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.  விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த எடைக்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக அஸ்லாம்  பாஷாவின் மனைவி கதீஜாபானு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த சையத் சகாபுதீன்(30) மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Next Story