திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆந்திர பெண் அங்கப்பிரதட்சணம்


திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆந்திர பெண் அங்கப்பிரதட்சணம்
x
தினத்தந்தி 22 Jun 2021 11:25 PM IST (Updated: 22 Jun 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆந்திர பெண் அங்கப்பிரதட்சணம் செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. 

இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அதுமட்டுமின்றி சாதாரண நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். 

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பீமவரம் பகுதியை சேர்ந்த மாதவி என்ற பெண் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டி கடந்த 5 நாட்களாக ஒரு நாளைக்கு 2 கிலோ மீட்டர் வீதம் கிரிவலப் பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார்.

இவர், ஏற்கனவே உலக நன்மைக்காக 3 முறை கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story