கள்ளக்காதலால் மனைவி கழுத்தை அறுத்துக்கொலை


கள்ளக்காதலால் மனைவி கழுத்தை அறுத்துக்கொலை
x
தினத்தந்தி 22 Jun 2021 11:28 PM IST (Updated: 22 Jun 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி திரும்பி வந்த நிலையில், அவரை கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை ெசய்தார். அவருடைய குழந்தையின் கண்முன் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

ராமேசுவரம், 
ஜூன்
கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி திரும்பி வந்த நிலையில், அவரை கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை ெசய்தார். அவருடைய குழந்தையின் கண்முன் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
ராமேசுவரம் மல்லிகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தில்லைக்குமார் (வயது 28). இவர் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் தள்ளுவண்டியில் இளநீர் விற்பனை செய்து வந்தார்.
இவருடைய மனைவி பவித்ரா (வயது 21). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 25-ந் தேதி திடீரென பவித்ரா குழந்தையுடன் மாயமானார்.
 இது குறித்து அவருடைய கணவர் தில்லைக்குமார், ராமேசுவரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, நடந்த விசாரணையில் பவித்ராவுக்கும், வேறு ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், அதன்காரணமாக அவருடன் பவித்ரா சென்றுவிட்டதாகவும் தெரியவந்தது.
இந்தநிலையில், பவித்ரா, கடந்த 19-ந் தேதி மீண்டும் குழந்தையுடன் கணவரை தேடிவந்தார். அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து, இருவரையும் சேர்த்து வைத்தனர்.
கழுத்தை அறுத்துக் கொலை
இருந்தாலும் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
 இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது தனது குழந்தையை பவித்ரா மடியில் வைத்திருந்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தில்லைக்குமார் ஆத்திரம் அடைந்து குழந்தையை மடியில் இருந்து இறக்கிவிட்டு, குழந்தையின் கண்முன்னே இளநீர் வெட்டும் அரிவாளால் பவித்ராவின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை அலறியது. உடனே பக்கத்து வீட்டினர் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் பவித்ரா கொலை செய்யப்பட்டு கிடந்தார். தில்லைக்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்..
பின்னர் இதுபற்றி ராமேசுவரம் டவுன் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பவித்ராவின் உடலை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கள்ளக்காதலனுடன் சென்றதால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த தில்லைக்குமார், பவித்ராவை கழுத்தை அறுத்து ெகான்றது தெரியவந்தது. 
கைது
பின்னர் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் பதுங்கி இருந்த தில்லைக்குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் ராமேசுவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story