பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2021 11:28 PM IST (Updated: 22 Jun 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருத்துறைபூண்டி;
திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்.   ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், விவசாய சங்க நகர செயலாளர் டி. பி. சுந்தர், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலு, நகர செயலாளர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாய தொழிலாளர் சங்க நகர பொருளாளர் தாஜுதீன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
மன்னாா்குடி 
மன்னார்குடி நகர, ஒன்றிய ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து
மன்னாா்குடி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் கே.மணி தலைமை தாங்கினார். நகர செயலாளா் எஸ்.எஸ்.சரவணன்
ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளா் வீ.கலைசெல்வன், இ.கம்யூனிஸ்டு் கட்சி நகர துனை செயலாளா் என்.தனிக்கோடி, விவசாயிகள் சங்க நகர செயலாளா் வி.எம்.கலியபெருமாள், நகர ஆட்டோ சங்க நிா்வாகிகள் எஸ்.பாஸ்கர், ஆர்.நாகேந்திரன், கே.செல்வம், ஜி. முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல்- டீசல் விலை உயா்வை குறைக்க வேண்டும். கொேரானா காலங்களில் ஆட்டோ தொழிலாளா்களுக்கு நிவாரண நிதி மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். தனியாா் நிறுவனங்கள் வங்கிகள் கடன் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Next Story