தினத்தந்தி செய்தி எதிரொலி உடைந்த குடிநீர் குழாயை சரி செய்யும் பணி மும்முரம்


தினத்தந்தி செய்தி எதிரொலி உடைந்த குடிநீர் குழாயை சரி செய்யும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 22 Jun 2021 6:43 PM GMT (Updated: 2021-06-23T00:13:12+05:30)

தினத்தந்தி செய்தி எதிரொலியாக உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

நெகமம்

தினத்தந்தி செய்தி எதிரொலியாக உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 

குடிநீர் குழாய் உடைப்பு 

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், கொண்டேகவுண்டன்பாளையத்தில் அம்பராம்பாளையம் குடிநீர் குழாய் உடைந்து ரோட்டில் தண்ணீர் வீணாக சென்றது. கடந்த 2 மாதங்களாக தண்ணீர் சாலையில் சென்றதால், அந்த வழியாக சென்ற வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றன.

இதனால் அந்த வழியாக நடந்து சென்றவர்கள் பெரிதும் அவதிய டைந்தனர். அதுபோன்று குழாய் உடைந்த பகுதியில் குழி கிடந்ததால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதற்குள் விழுந்து காயங்களுடன் உயிர் தப்பித்துச்சென்றனர்.

தினத்தந்தியில் செய்தி 

இது தொடர்பாக தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப் பட்டது. அதன் எதிரொலியாக  தற்போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கள் உடனடி நடவடிக்கை எடுத்து, உடைந்த குழாயை சரிசெய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

இதனால் அதிகாரிகள் மற்றும் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- 

சரி செய்யும் பணி 

குழாய் உடைப்பால், சாலையில் தண்ணீர் 2 மாதமாக வீணாக சென்றது. பல இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், இங்கு குடிநீர் வீணாக சாலையில் சென்றதை அதிகாரிகள் சரிசெய்ய முன்வரவில்லை. 

எனவே தினத்தந்தியில் செய்தி வெளிவந்ததும், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதுபோன்று குழாயில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story