கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் அதிகாரிகளுடன் ஆசிரியர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு


கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் அதிகாரிகளுடன் ஆசிரியர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Jun 2021 6:51 PM GMT (Updated: 2021-06-23T00:21:42+05:30)

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் அதிகாரிகளுடன் ஆசிரியர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் அதிகாரிகளுடன் ஆசிரியர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தடுப்பூசி சிறப்பு முகாம் 

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை உள்பட 11 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்  நடைபெற்றது. 

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு வந்த ஆசிரியர்கள் நீண்ட வரிசையில் தடுப்பூசி போடுவதற்கு காத்திருந்தனர். 

அப்போது ஆசிரியர்கள் இல்லாத நபர்களை வரிசையில் நிற்க வைக்காமல், உள்ளே அனுமதித்து தடுப்பூசி போட்டதாக தெரிகிறது. 

கடும் வாக்குவாதம் 

இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆசிரியர்களுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். 

இதையடுத்து தடுப்பூசி போடுவதற்கு சென்ற ஆசிரியர்கள் இல்லாத நபர்கள் வெளியேற்றப்பட்டனர். இதை தொடர்ந்து வரிசையில் நின்ற ஆசிரியர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் டோக்கன்படி ஒவ்வொருவராக அழைத்து தடுப்பூசி போடப்பட்டது. 

303 பேருக்கு தடுப்பூசி

இதில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை கடைப் பிடிக்காமல் நெருக்கமாக நின்றதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதேபோன்று ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களிலும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 143 பேர், தெற்கு ஒன்றியத்தில் 150 பேர், ஆனை மலை ஒன்றியத்தில் 140 பேர் என்று மொத்தம் 303 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றனர்.


Next Story