பரமத்திவேலூர் பகுதியில் 60 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


பரமத்திவேலூர் பகுதியில் 60 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Jun 2021 12:38 AM IST (Updated: 23 Jun 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் பகுதியில் 60 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் வெளியே சுற்றித்திரிவதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் வெளியே அவசியமின்றி சுற்றித்திரிவோரின் வாகனங்களை பறிமுதல் செய்ய கலெக்டர் ஸ்ரேயாசிங் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்தநிலையில் நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்திவேலூர் காவிரி இரட்டை பாலத்தில் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலை, சோழசிராமணி கதவணை பாலம், மோகனூர் சாலை ஆகிய இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்கள் மீது துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 60 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story