மாவட்ட செய்திகள்

பரமத்திவேலூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + suicide

பரமத்திவேலூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பரமத்திவேலூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்திவேலூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி பிரீத்தி (35). இந்த தம்பதிக்கு ஆசிஸ் ராகவேந்திரா (13) என்ற மகன் உள்ளான். விஜயகுமார், பிரீத்தி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக பிரீத்தி கணவரிடம் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு மகனுடன் சென்று விட்டார். இதனிடையே நேற்று ஆசிஸ் ராகவேந்திரா, தனது தந்தை விஜயகுமாருக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுத்து பேசாததால் உறவினர்கள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் விஜயகுமார் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை
வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
3. போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வளவனூர் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. எஸ்.வாழவந்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
எஸ்.வாழவந்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.