அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நோய் பரவும் அபாயம்


அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 23 Jun 2021 12:46 AM IST (Updated: 23 Jun 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நோய் பரவும் அபாயம்

திருப்பூர்
திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை குடியிருப்பு பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம். எங்களுடைய சுற்றுப்புற பகுதிகள் அசுத்தமாகவும், ஆக்கிரமிப்புகள் நிறைந்து காணப்படுகிறது.
வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் நிரம்பி வழிகிறது. நொய்யல் ஆற்றில் ஆகாயத்தாமரை வளர்ந்து இருப்பதாலும் கொசு மற்றும் பூச்சிகள் தொந்தரவு உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சுகாதார பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story