திருப்பூர் மணியக்காரம் பாளையத்தில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள்
திருப்பூர் மணியக்காரம் பாளையத்தில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள்
திருப்பூர்,
திருப்பூர் மணியக்காரம் பாளையத்தில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த சாலையை விரைவில் சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணியக்காரம்பாளையம் ரோடு
பின்னலாடை தொழில் நகரான திருப்பூர் டாலர் சிட்டி என்று அழைக்கப்பட்டு வருகிறது. அன்னிய செலாவணியை ஈட்டி கொடுத்தாலும் மாநகரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இதுவரையும் சரிவர இல்லை. வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் வாகன போக்குவரத்து அதிகம். ஆனால் அந்த அளவுக்கு சாலை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. மாநகரின் பல பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக செப்பனிடப்படாமல் காணப்படுகிறது.
குறிப்பாக காசிபாளையத்தில் இருந்து மணியக்காரம்பாளையம் வழியாக ராக்கியாபாளையம் செல்லும் ரோடு அதிகப்படியான வாகன போக்குவரத்தை கொண்டது. இதில் மணியக்காரம்பாளையம் காஞ்சி நகர் மின்வாரிய அலுவலகம் அருகே சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு தார்ரோடு மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
சாலையை சீரமைக்க வேண்டும்
காசிபாளையத்திலிருந்து ராக்கியாபாளையம் செல்ல வேண்டியவர்கள் நல்லூரைச்சுற்றி செல்வதற்கு பதிலாக மணியக்காரம்பாளையம் வழியாக இந்த ரோட்டை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இவர்கள் எளிதில் ராக்கியாபாளையம் சென்று விட முடியும். ஆனால் காஞ்சிநகர் பகுதியில் ரோடு மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் அடிக்கடி இந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகிறார்கள்.
காஞ்சி நகர் பகுதிகளில் ஏழை மக்கள் குடியிருக்கும் பகுதியாக உள்ளது. அந்த பகுதியில் சாலை மிகவும் மோசமடைந்து இருப்பதால் மக்கள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். வாகன ஓட்டிகளுக்கு முக்கிய சாலையாக விளங்கிவரும் இந்த சாலையை விரைவில் சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story