குண்டடம் அருகேவெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்


குண்டடம் அருகேவெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்
x
தினத்தந்தி 23 Jun 2021 12:53 AM IST (Updated: 23 Jun 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

குண்டடம் அருகேவெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்

வெள்ளகோவில்,
வெள்ளகோவில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வரை பொதுமக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றிய பள்ளி மேற்கு, தீத்தாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆகிய இடங்களில் தனித்தனியாக தடுப்பூசி போடப்பட்டது. 
தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அதிகாலை முதலே சமூக இடைவெளி கடைபிடிக்காமல் நின்றுகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பெரும்பாலான தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதுமட்டுமின்றி எந்தெந்த இடங்களில் எந்த வகையான தடுப்பூசி போடப்படுகிறது. எந்த வயதினருக்கு போடப்படுகிறது என்பது குறித்து சரியான தகவல் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். 
இந்த நிலையில் பொதுமக்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. அதன்படி வெள்ளகோவில் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில்  பொதுமக்களுக்கு நேற்று முன்தினமே டோக்கன் வழங்கப்பட்டது.  டோக்கன் பெற்றுக்கொண்ட பொதுமக்கள் நேற்று  தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Next Story