காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது என்று ஊராட்சி செயலர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு


காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது என்று ஊராட்சி செயலர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 22 Jun 2021 7:26 PM GMT (Updated: 2021-06-23T00:56:07+05:30)

காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது என்று ஊராட்சி செயலர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

உடுமலை,
வீடு,வீடாக கணக்கெடுப்பின்போது காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது என்று ஊராட்சி செயலர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஊராட்சி செயலாளர்கள் கூட்டம்
உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் கூட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் நாகராஜன் தலைமை தாங்கினார். உடுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்வது. அதன்படி 100 வீடுகளுக்கு ஒருவர் வீடு, வீடாக காலை 7 மணி முதல் மணிவரை சென்று சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா என்று விசாரிப்பது.
உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு
அப்போது காய்ச்சல் அறிகுறி இருந்தால் அதுகுறித்த தகவலை மாவட்ட சுகாதார துறைக்கு தெரிவிப்பது. காய்ச்சல் உள்ளவர்களை சுகாதார துறையின் மூலம் மருத்துவ மனைக்கு உடனடியாகஅனுப்பி சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது. எனமுடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story