மடத்துக்குளம் பகுதியில் கனரக வாகனங்களால் சாலைகள் சேதமடைந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


மடத்துக்குளம் பகுதியில் கனரக வாகனங்களால் சாலைகள் சேதமடைந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
x
தினத்தந்தி 23 Jun 2021 12:58 AM IST (Updated: 23 Jun 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் பகுதியில் கனரக வாகனங்களால் சாலைகள் சேதமடைந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

போடிப்பட்டி:
மடத்துக்குளம் பகுதியில் கனரக வாகனங்களால் சாலைகள் சேதமடைந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள்
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் கல் குவாரிகள் மற்றும் கல் உடைக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர நார் தொழிற்சாலைகள், நூற்பாலைகள் போன்ற பல்வேறு தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனங்களுக்கான மூலப்பொருட்களை கொண்டு வருவதற்கும் உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. 
இந்தநிலையில் மைவாடி கணியூர் சாலை மற்றும் துங்காவி மடத்துக்குளம் சாலை சந்திப்பு பகுதியில் கனரக வாகனங்களால் சாலைகள் அதிக அளவில் சேதமடைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
விவசாயப் பணிகளுக்காகவும், தொழில் நிறுவனங்களின் தேவைக்காகவும் இயக்கப்படும் வாகனங்களால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் கல், மண் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் சாலைகள் சேதமடைவதுடன் பொதுமக்களும் அவதிப்படும் நிலை உள்ளது.
மண் குவியல்
இந்த பகுதியில் தொடர்ச்சியாக கனரக வாகனங்கள் அதிக எடையுடன் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் சாலை சேதமடைந்து குழியாக மாறியதுடன் சாலை முழுவதும் மண் குவியலாய் கிடக்கிறது.மேலும் மழைக் காலங்களில் இந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பல வாகனங்களில் மண், ஜல்லிக்கற்கள் போன்றவற்றை மூடாமல் எடுத்து செல்வதால் புழுதி பறக்கிறது. அத்துடன் ஒருசில வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளதால் சாலையெங்கும் மண்ணைத் தூவிக்கொண்டே செல்கிறது.இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்ணில் மண் விழுந்து அவதிப்படுவதும், விபத்தில் சிக்குவதும் தொடர்கதையாக உள்ளது.மேலும் இந்த பகுதியிலுள்ள விவசாயப் பயிர்கள் மண் புழுதியால் பாதிப்புக்குள்ளாவதுடன் பொதுமக்கள் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது.
எனவே இந்த பகுதியில் சாலையை சீரமைக்கவும் கனரக வாகனங்களை ஒழுங்குபடுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோல நரசிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவ்வாறு  வாகன ஓட்டிகள் கூறினர்.

Next Story