மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கும் பணி


மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கும் பணி
x
தினத்தந்தி 23 Jun 2021 12:58 AM IST (Updated: 23 Jun 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் 1,508 பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 25 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு 10 லட்சத்து 3,900 இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியினை கலெக்டர் மேகநாதரெட்டி நேற்று தொடங்கி வைத்தார். விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்கினார். இதில் பள்ளி தலைமையாசிரியை ஜெயஸ்ரீ மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story