கும்பகோணம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது ஆட்டோ- மோட்டார் சைக்கிள் பறிமுதல்
கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணம்:-
கும்பகோணம், திருவிடைமருதூர் போலீஸ் உட்கோட்ட குற்ற தடுப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்திவாசன், காமராஜ் மற்றும் போலீசார் கருப்பூர் மற்றும் தாராசுரம் பைபாஸ் சாலை பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோவை சோதனையிட்டதில் தலா 30 கிராம் எடை கொண்ட 20 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்த மாதுளம்பேட்டை தெருவை சேர்ந்த காளிதாசை (வயது 30) கைது செய்து ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு சென்றது தெரியவந்தது. இதேபோல பாபநாசம் மார்க்கத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் 600 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக எடுத்து சென்ற அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேலணிக்குழி ஏரி மேட்டுத் தெருவை சேர்ந்த தேவேந்திரன் (21), விஜய் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story