4 கால்களுடன் பிறந்த கோழி குஞ்சு


4 கால்களுடன் பிறந்த கோழி குஞ்சு
x
தினத்தந்தி 23 Jun 2021 1:04 AM IST (Updated: 23 Jun 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே 4 கால்களுடன் கோழி குஞ்சு பிறந்தது.

காரியாபட்டி, 
காரியாபட்டி அருகே சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். விவசாயியான இவர் வீட்டில் எண்ணற்ற கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான கோழி ஒன்று குஞ்சு பொரித்தது. அதில் ஒரு குஞ்சு மட்டும் 4 கால்களுடன் பிறந்துள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

Next Story