கரூரில் புதிதாக 94 பேருக்கு கொரோனா
கரூரில் புதிதாக 94 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்
தமிழகத்தில், கொரோனா 2-வது அலை குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், கரூர் மாவட்டத்தில் வைரஸ் தெற்று வெகுவாக குறையாததால் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழக சுகாதாரத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி மாவட்டத்தில் நேற்று புதிதாக 94 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 87 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போதைய நிலவரப்படி 777 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
Related Tags :
Next Story