சாயப்பட்டறை கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கிறதா? சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 23 Jun 2021 1:11 AM IST (Updated: 23 Jun 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

சாயப்பட்டறை கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கிறதா? என்று சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கரூர்
சாயப்பட்டறை கழிவுநீர்
 கரூர் வஞ்சுமாலீஸ்வரர் கோவில் அருகே உள்ள சாயப்பட்டறையில் இருந்து வெளியேற்றப்படும் சாயக் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலப்பதாகவும், இதன் காரணமாக அந்த தண்ணீர் மாசுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனை, மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இதுெதாடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்பேரில், அமராவதி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலக்கிறதா?, எந்தெந்த ஆலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது என்பது குறித்து விசாரிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 
சுற்றுச்சூழல் அதிகாரிகள் விசாரணை 
இதையடுத்து சேலம் சுற்றுச்சூழல் இணை ஆணையர் மதிவாணன் தலைமையில் கரூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் மற்றும் பறக்கும் படை அலுவலர் மணிவண்ணன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கரூர் சின்னாண்டாங்கோவில் திருமாநிலையூர் படித்துறை வஞ்சுமாலீஸ்வரர் கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளில் ஆய்வு மேற்கொண்டனர். 
 இதுதொடர்பான ஆய்வறிக்கையை பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

Next Story