மோட்டார் சைக்கிள்களில் மது கடத்தியவர்கள் உள்பட 4 பேர் கைது


மோட்டார் சைக்கிள்களில் மது கடத்தியவர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2021 1:18 AM IST (Updated: 23 Jun 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்களில் மதுபாட்டில்களை கடத்தியவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து, 60 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மீன்சுருட்டி:

மதுபாட்டில்கள் கடத்தல்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் வடவார் தலைப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர்.
இதில் அவர்கள், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் வடக்கு தெருவை சேர்ந்த சரவணன் (வயது 19), விக்னேஷ்(24) என்பதும், 2 பேரும் தனித்தனியாக மோட்டார் சைக்கிள்களில் தலா 20 குவார்ட்டர் பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 40 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கைது
இதேபோல் வடவார் தலைப்பில், ஜெயங்கொண்டம் பெரிய வளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ்(39) மற்றும் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள மேலகாட்டூர் கிராமத்தை சேர்ந்த கேசவன்(51) ஆகிய 2 பேரும் தலா 10 குவார்ட்டர் பாட்டில்களை தங்களது மோட்டார் சைக்கிள்களில் வைத்திருந்தது, போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து மொத்தம் 20 மதுபாட்டில்களை போலீசார்  பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story