இருதரப்பினர் மோதல்; 11 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் மோதல்; 11 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 Jun 2021 1:18 AM IST (Updated: 23 Jun 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமங்கலம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விக்கிரமங்கலம்:

தகராறு
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள தெற்கு நரியங்குழி கீழத்தெருவை சேர்ந்தவர் மன்மதகாசி(வயது 54). இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன்(38). விவசாயியான இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2 பேரின் விவசாய நிலங்களும் ஒரே இடத்தில் இருப்பதாகவும், மன்மதகாசி தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும்போது அருகே உள்ள தியாகராஜன் நிலத்திற்கு தண்ணீர் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
11 பேர் மீது வழக்கு
இது குறித்து தியாகராஜன், மன்மதகாசியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தியாகராஜனின் உறவினர்கள் சிவராஜ், ராதாகிருஷ்ணன், சுதா, பாப்பாத்தி, ஆதி, அரவிந்தன் ஆகியோரும், மன்மதகாசியின் உறவினர்கள் செல்வம், சின்னதுரை, மீரா ஆகியோரும் அங்கு வந்து ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் இருதரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில் தியாகராஜன், மன்மதகாசி உள்பட இருதரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story