பெண்கள் உதவி மையத்திற்கு நியமிக்கப்பட்ட போலீசாருக்கு வழிகாட்டுதல் வகுப்பு
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, போலீஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் உதவி மையத்திற்கு நியமிக்கப்பட்ட போலீசாருக்கு வழிகாட்டுதல் வகுப்பு அரியலூரில் நடந்தது.
அரியலூர்:
வழிகாட்டுதல் வகுப்பு
அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பெண்கள் உதவி மையத்திற்கு(வுமன் ஹெல்ப் டெஸ்க்) நியமிக்கப்பட்ட பெண் ேபாலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வகுப்பு நடைபெற்றது. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக நடந்த வழிகாட்டுதல் வகுப்பின் தொடக்க நிகழ்ச்சியில் ஏ.டி.ஜி.பி. சீமா அகர்வால் காணொலி வாயிலாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியை ெதாடங்கி வைத்து பேசினார். திருச்சி சரக டி.ஐ.ஜி. ராதிகா முன்னுரை ஆற்றினார்.
முன்னதாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா வரவேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-
மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்க்க ேபாலீஸ் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் 2 பெண் போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு
அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 2 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் மற்றும் 6 போலீஸ் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இலவச சேவை தொடர்பு எண் 181-க்கு வரும் அழைப்புகளுக்கு போலீசார், சம்பந்தப்பட்டவர்களின் இருப்பிடம் சென்று உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள். பெண்கள் சார்பான பிரச்சினைகள் தொடர்பாக சி.எஸ்.ஆர். (கம்யூனிட்டி சர்வீஸ் ரெஜிஸ்டர்) அல்லது வழக்கு பதிவு செய்யவும், பிரச்சினைகள் தொடர்புடைய மற்ற துறைகளான சமூகநலத்துறை, மருத்துவ மற்றும் உளவியல் துறை, தொழிலாளர் நலத்துறை, மகளிர் திட்டம் போன்ற துறைகளுடன் இணைந்து அவர்களது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினை அளிப்பார்கள்.
மேலும் ஆதரவற்றோருக்கு அடைக்கலம் அளிக்கவும், பொருளாதார வசதி செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்து தரப்படும். பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு ஆலோசனை கூறவும், பாதுகாப்பு அளிக்கவும் அரியலூர் பொது மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைப்பாளர் கண்காணிப்பில் ஒன் ஸ்டெப் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஒன் ஸ்டெப் சென்டர் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி, மாவட்ட தொழிலாளர் அதிகாரி குருநாதன், மனநல மருத்துவர் அன்பழகி, அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் சிறப்பு வகுப்பு எடுத்தனர். முடிவில் அரியலூர் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு சேகர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story