செம்மண் கடத்த முயன்ற 3 பேர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 22 Jun 2021 7:58 PM GMT (Updated: 2021-06-23T01:28:48+05:30)

செம்மண் கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த சித்தலவாய் ஊராட்சி பூஞ்சோலை புதூர் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் சிலர் செம்மண்னண அள்ளி லாரியில் கடத்துவதாக அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி விமலாவிற்கு தகவல் கிடைத்தது. அவர், இதுகுறித்து மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு, எவ்வித அனுமதியும் இன்றி பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண்ணை அள்ளி லாரியில் கடத்த முயன்றதாக சேங்கலை சேர்ந்த மணிமாறன் (வயது 24), பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சரவணன் (27), சின்ன கிணத்துப்பட்டியை சேர்ந்த ராமசாமி (60) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story