காதல் தகராறில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது


காதல் தகராறில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது
x
தினத்தந்தி 22 Jun 2021 8:13 PM GMT (Updated: 2021-06-23T01:43:21+05:30)

காதல் தகராறில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது

மேட்டூர்
மேட்டூர் மாதையன் குட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் அமிர்தன் (வயது 19). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஈரோடு மாவட்டம் பூனாட்சியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 22). இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர்.
இந்த நிலையில் சதீஷ்குமாரின் சகோதரியிடம் அமிர்தன் காதலிக்க வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த சதீஷ்குமார் ஆத்திரம் அடைந்தார். இதனிைடயே மேட்டூர் மாதையன் குட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சதீஷ்குமார் வந்தார். அப்போது அமிர்தனை அழைத்து காதல் தொடர்பாக தனியாக பேசிக் கொண்டிருந்தார். இதில் அவர்களுக்கு இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. 
ேமலும் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அமிர்தனை குத்தினார். இதில் அவருடைய அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். உடனே அங்கிருந்து சதீஷ்குமார் தப்பி ஓடிவிட்டார். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த அமிர்தனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் அமிர்தன் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து தலைமறைவான சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story