கஞ்சா விற்ற அண்ணன்-தம்பி கைது


கஞ்சா விற்ற அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 23 Jun 2021 2:04 AM IST (Updated: 23 Jun 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கஞ்சா விற்ற அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகன்கள் பாபு (வயது 27), மந்திரமூர்த்தி (24). இவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடம் அருகே வைத்து கஞ்சா விற்றுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபு, மந்திரமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story