வாலிபர் தாக்கியதில் காயம் அடைந்த தொழிலாளி சாவு
ஆரல்வாய்மொழியில் வாலிபர் தாக்கியதில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அதைத்தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி வாலிபரை போலீசார் பிடித்தனர்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் வாலிபர் தாக்கியதில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அதைத்தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி வாலிபரை போலீசார் பிடித்தனர்.
தொழிலாளி
ஆரல்வாய்மொழி அழகியநகர் இந்திரா காலனியை சேர்ந்தவர் ராமன் (வயது 41), கூலி தொழிலாளி. இவருடைய முதல் மனைவி நாகம்மாள். அவருக்கு குழந்தை இல்லை. இரண்டாவது மனைவி செல்வி (25), இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
ராமன் சம்பவத்தன்று அழகியநகர் பகுதியில் உள்ள பாலத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர் கிறிஸ்து நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த சாமுவேல் (30) மது வாங்கி கொண்டு வந்து ராமனை மது குடிக்க வருமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு ராமன் மறுத்ததால், சாமுவேல் அவரை பிடித்து தள்ளியுள்ளார். இதில் ராமன் அருகில் உள்ள ஓடையில் தலைகுப்புற விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ராமன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.
கொலை வழக்கு
அதைத்தொடர்ந்து ராமன் தாக்கப்பட்டு இறந்ததை போலீசார் கொலை வழக்காக மாற்றி சாமுவேலை தேடினார்கள். அப்போது சாமுவேல் மற்றும் அவர் வீட்டில் உள்ளவர்களும் கதவை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டனர். எனவே போலீசார் சாமுவேல் மனைவியின் ஊரான காவல்கிணறுக்கு சென்றனர். அங்கும் அவர் இல்லை.
பின்னர் போலீசார் நடத்்திய விசாரணையில், சாமுவேல் கருங்கல் பகுதியில் உள்ள தங்கை வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ரகு பாலாஜி அடங்கிய தனிப்படையினர் கருங்கல் சென்று சாமுவேலை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story