நங்கநல்லூரில் கழிவுநீர் கால்வாய்கள் தூர் வாரும் பணி


நங்கநல்லூரில் கழிவுநீர் கால்வாய்கள் தூர் வாரும் பணி
x
தினத்தந்தி 23 Jun 2021 11:27 AM IST (Updated: 23 Jun 2021 11:27 AM IST)
t-max-icont-min-icon

நங்கநல்லூரில் கழிவுநீர் கால்வாய்கள் தூர் வாரும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஆலந்தூர், 

தமிழகத்தில் பருவ மழை வருவதற்கு முன் மழைநீர் கால்வாய்கள் தூர் வாரி சுத்தம் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள 12 வார்டுகளிலும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் சார்பில் பருவமழை முன்பு கழிவுநீர் கட்டமைப்புகளை முழுமையாக தூர்வாருதல் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது.

இதற்கான தொடக்க விழாவில், மெட்ரோ குடிநீர் வாரிய முதன்மை பொறியாளர் நரசிம்மன் தலைமை தாங்கினார். கழிவு நீர் குழாய்கள் தூர் வாரும் பணியை தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். 12 வார்டுகளில் தூர் வாரும் வாகனங்களை தி.மு.க.,எம்.பி.,ஆர்.எஸ்.பாரதி கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதில் மெட்ரோ குடிநீர் வாரிய கண்காணிப்பு பொறியாளர் இரவீந்திரநாதன், ஆலந்தூர் பகுதி பொறியாளர் ஜான்சிராணி, முன்னாள் கவுன்சிலர் என்.சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story