உத்தமபாளையம் சிறைச்சாலை விரிவுபடுத்தப்படுமா?
உத்தமபாளையம் சிறைச்சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய இடங்களில் கிளைச்சிறைகளும், கண்டமனூரில் மாவட்ட சிறைச்சாலையும் செயல்பட்டு வருகின்றன. உத்தமபாளையம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கிளை சிறைச்சாலை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும்.
பழமை வாய்ந்த இந்த சிறையில் 5 அறைகள் உள்ளன. இதில் 40-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு தனி அறை கிடையாது. இதனால் அரசு மருத்துவமனைக்கு கைதிகளை அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தநிலையில் பழைய கோர்ட்டு கட்டிடம் அருகே, புதிதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனால் பழைய தாலுகா அலுவலகத்தை கிளை சிறைச்சாலை விரிவாக்கத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சிறைச்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் அங்கு காவலர் குடியிருப்பு மற்றும் கைதிகளுக்கு சிகிச்சை அறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Related Tags :
Next Story