விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி; கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
2,185 பள்ளிகள்
திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி மற்றும் செய்யாறு ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் 2 ஆயிரத்து 7 அரசு பள்ளிகள் மற்றும் 178 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 2,185 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 802 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இந்த மாணவர்களுக்கு 2021-2022-ம் கல்வி ஆண்டிற்கான தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடப் புத்தகங்கள் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.
மாணர்வகளுக்கு பாடப் புத்தகங்கள்
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அந்த பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தையும், திருவண்ணாமலை சன்னதி தெருவில் பழைய நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி மாதிரி தொடக்கப்பள்ளியிலும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆக்சிஜன் சிலிண்டர்கள்
மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story