கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசு


கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 23 Jun 2021 4:29 PM GMT (Updated: 23 Jun 2021 4:29 PM GMT)

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கீழக்கரை, 
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவின்படி பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி கீழக்கரை சின்னக்கடை தெருவில் சுகாதாரத்துறை, சின்னக்கடைத்தெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம், மக்கள் டீம் இணைந்து தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் தடுப்பூசி செலுத்த வரும் முதல் 10 பெண்களுக்கு சில்வர் பானைகளும் மேலும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பேருக்கு மின்விசிறியும் வழங்கப்பட்டது. ஏராளமான ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நிகழ்ச்சியில் கீழக்கரை தாசில்தார் முருகேசன் தலைமையில் வட்டார மருத்துவர் செய்யது ராசிக்தீன், துணை தாசில்தார் பழனிகுமார், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நகராட்சி கமிஷனர் பூபதி, மக்கள் டீம் காதர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் மேலத்தெருவில் உள்ள ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 26-ந் தேதி அனைத்து ஜமாத் கூட்ட மைப்பு சார்பில் பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடை பெற உள்ளது. இந்த முகாமிலும் பொருட்கள் இலவசமாக வழங்கப் படும் என்று அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் ஹாமிது இபுராகிம், செயலாளர் ஷேக் ஹுசைன் ஆகியோர் தெரிவித்தனர். முகாம் மூலம் பயன்பெற வட்டார மருத்துவர் செய்யது ராசிக்தீன் கேட்டுக்கொண்டார்.

Next Story