கைதான வாலிபர் குறித்த வீடியோவால் பரபரப்பு
கைதான வாலிபர் குறித்த வீடியோவால் பரபரப்பு
கோவை
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அவர்கள் விசாரணை நடத்தி, அந்த மாணவியுடன் பழகி ரூ.35 ஆயிரம் பறித்து, புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைத் தளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய கேசவ்குமார் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.
அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய தாய் மங்கையர்க்கரசியையும் (46) போலீசார் கைது செய்தனர்.
கைதான கேசவ்குமார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர். இவர், கோவையில் தங்கி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கல்லூரி மாணவிகளை குறிவைத்து காதலிப்பதாக நடித்து புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரியவந்துள்ளது.
கேசவ்குமாரின் வலையில் மேலும் பல மாணவிகள் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர், ஒரு கல்லூரி மாணவரை தாக்குவது மற்றும் அரிவாளுடன் இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எனவே சிறையில் அடைக்கப் பட்டு உள்ள கேசவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story