பாலியல் தொல்லை கொடுத்தால் குண்டர் சட்டம் பாயும்


பாலியல் தொல்லை கொடுத்தால் குண்டர் சட்டம் பாயும்
x
தினத்தந்தி 23 Jun 2021 4:59 PM GMT (Updated: 2021-06-23T22:29:04+05:30)

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் குண்டர் சட்டம் பாயும் என்று போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் எச்சரித்துள்ளார்.

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் குண்டர் சட்டம் பாயும் என்று போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் எச்சரித்துள்ளார்.
தகவல் ரகசியம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஹபீப் முகம்மது (வயது38) என்பவர் மாணவி ஒருவருக்கு பாலுணர்வை தூண்டும் வகையில் தகவல் அனுப்பியதும், பேசியதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் கூறியதாவது:- மேற்கண்ட பள்ளியில் மாணவிகள் யாரேனும் இந்த ஆசிரியரால் இதுபோன்ற தொந்தரவுக்கு ஆளாகி இருந்தால் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு தைரியமாக தகவல் தெரிவிக்கலாம். அவர்களின் தகவல் ரகசியமாக வைத்துகொள்ளப்படும்.
இதுதவிர, மாவட்டத்தில் இதுபோன்ற குற்ற செயல்களில் மாணவி களிடம் யாராவது ஈடுபட்டால் துணிச்சலுடன் காவல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போக்சோ சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
குண்டர் சட்டம்
மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். எனவே, மாணவிகள் இதுபோன்ற பாலியல் தொல்லை ஏற்பட்டால் துணிச் சலுடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story