வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 4 பேர் கைது


வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 4 பேர் கைது
x
வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 4 பேர் கைது
தினத்தந்தி 23 Jun 2021 10:33 PM IST (Updated: 23 Jun 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 4 பேர் கைது

கோவை, ஜூன்.24 -


கொரோனா பரவலை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் அடைக் கப்பட்டுள்ளன. இந்த நிலையில் போதைக்காக கஞ்சா உள்ளிட்டவற் றை போதைக்காக பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. 

மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர்.

இந்த நிலையில் வலி நிவாரணி மற்றும் மயக்கத்துக்காக பயன்படுத்தும் "டைடல் டெபென்டல் " என்ற மாத்திரைகளை போதைக்காக ஒரு கும்பல் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் பிரேமானந்தன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் போலீசார் சாய்பாபா காலனி பகுதியில் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற 4 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், கோவை டி.வி.எஸ்.நகர், சிவா நகரை சேர்ந்த பார்த்திபன் (வயது35), கவுண்டம் பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த ஜானகிராமன் (24), குனியமுத்தூர் லவ்லி கார்டனை சேர்ந்த முகமது அப்சல் (21), கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த கபிலேஷ் என்பது தெரிய வந்தது.

 இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் போதைக்காக பயன்படுத்திய 650 வலி நிவாரண மாத்திரை, ரூ.11500 பறிமுதல் செய்யப்பட்டன. 

வலி நிவாரணி மற்றும் மயக்க மருந்துக்கு பயன்படுத்தும் இந்த மாத்திரையை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி போதைக்காக பயன்படுத்தி உள்ளனர்.


அதை அவர்கள் கல்லூரி மாணவர்கள் பலருக்கு போதைக்காக விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து  போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான 4 பேரும் அடைக்கப்பட்ட னர். 

இந்த நிலையில் கல்லூரி மாணவர்களின் வாழ்வை சீரழிக்கும் போதை மருந்து கும்பல் நடமாட்டம் கோவையில் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பு நடத்தி வருகிறார்கள்.

--

Next Story