பா.ஜ.க. சார்பில் மரக்கன்றுகள்


பா.ஜ.க. சார்பில் மரக்கன்றுகள்
x
தினத்தந்தி 23 Jun 2021 5:07 PM GMT (Updated: 2021-06-23T22:37:55+05:30)

தொண்டி பேரூராட்சி பகுதியில் பா.ஜ.க. சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தொண்டி, 
திருவாடானை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் தொண்டிபேரூராட்சி மற்றும் நம்புதாளையில் இந்திய தேசியத்தின் வழிகாட்டும் ஒளிவிளக்கு என புகழப்படும் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு பா.ஜ.க. மாவட்ட அறிவுசார் பிரிவு செயலாளர் குரு தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது நினைவாக திருவாடானை மற்றும் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் திருவாடானை கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரி, ரகுமான், ஒன்றிய நிர்வாகிகள் காளிதாஸ், கார்த்திக், ஹரி ஆகியோர் கலந்துகொண்டனர்

Next Story