புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு
நெலாக்கோட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
பந்தலூர்
நெலாக்கோட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
புதிய சாலைகள்
பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பழையசாவடி, பரிவாரம் வழியாக நரிக்கொல்லிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இதேபோல திருக்கப்பட்ரா பழங்குடியின காலனியில் உள்ள சாலைகள், கோழிமேடு கூலால் பகுதியில் உள்ள சாலைகள், திருவம்பாடி-பொட்டிரை சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமாக காணப்பட்டது.
இதையடுத்து இந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மேற்கண்ட பகுதியில் புதிய சாலைகள் மற்றும் கான்கிரீட் சாலைகள் அமைக்க மாவட்ட கலெக்டர் மொத்தம் ரூ.2 கோடியே 38 லட்சம் ஒதுக்கினார்.
கலெக்டர் ஆய்வு
தொடர்ந்து சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை மாவட்ட கலெடர் இன்னசென்ட் திவ்யாஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமாலினி, கூடலூர் ஆர்.டி.ஓ. சரவணகண்ணன், கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மோகன்குமாரமங்கலம், பந்தலூர் தாசில்தார் தினேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், ஒன்றிய பொறியாளர்கள் ஜோதிலிங்கம், ரமேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் உமா உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story