மலை காய்கறிகள் சாகுபடி குறித்து இணையதளம் வழியாக விவசாயிகளுக்கு பயிற்சி
மலை காய்கறிகள் சாகுபடி குறித்து இணையதளம் வழியாக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மலை காய்கறிகள் சாகுபடி செய்வது குறித்து இணையதளம் வழியாக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கு ஊட்டி உழவர் பயிற்சி நிலைய தோட்டக்கலை துணை இயக்குனர் ஷிபிலா மேரி தலைமை தாங்கினார். கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, தோட்டக்கலை மூலம் விவசாயிகளுக்கு மானியத்துடன் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். துணை தோட்டக்கலை அலுவலர் சந்திரன் அங்கக சான்றளிப்பு துறையின்கீழ் விவசாயிகள் தங்களது பெயர்களை பதிவு செய்யும் முறைகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து இந்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலைய முனைவரும், மன்னருவியல் ஆராய்ச்சியாளருமான கஸ்தூரி திலகம், இயற்கை முன்னோடி விவசாயி குமரகுரு, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரவீனா, உதவி தொழில்நுட்ப மேலாளர் மணிமேகலா ஆகியோர் பேசினர்.
இந்த பயிற்சியில் கோத்தகிரி வட்டாரத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story