பொது வினியோக திட்டத்துக்காக 2 ஆயிரம் டன் அரிசி


பொது வினியோக திட்டத்துக்காக 2 ஆயிரம் டன் அரிசி
x
தினத்தந்தி 23 Jun 2021 10:50 PM IST (Updated: 23 Jun 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் இருந்து வேலூருக்கு பொது வினியோக திட்டத்துக்காக சரக்கு ரெயிலில் 2 ஆயிரம் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்:
திருவாரூரில் இருந்து வேலூருக்கு பொது வினியோக திட்டத்துக்காக சரக்கு ரெயிலில் 2 ஆயிரம் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
பொதுவினியோக திட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.
2 ஆயிரம் டன் அரிசி 
அதன்படி நேற்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 42 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 2 ஆயிரம் டன் அரிசி மூட்டைகள் பொதுவினியோக திட்டத்திற்காக வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story