திருமருகல் கூட்டுறவு சங்கத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு


திருமருகல் கூட்டுறவு சங்கத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 23 Jun 2021 5:43 PM GMT (Updated: 2021-06-23T23:13:46+05:30)

திருமருகல் கூட்டுறவு சங்கத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கடன் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

திட்டச்சேரி;
திருமருகல் கூட்டுறவு சங்கத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கடன் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.  
கலெக்டர் ஆய்வு
நாகை மாவட்டம் திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் விபரங்கள் குறித்தும், உரங்கள் இருப்பு குறித்தும், இ-சேவை
மையங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகள் குறித்தும்அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். 
தடுப்பூசி முகாம்
இதைத்தொடர்ந்து திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு, வீடுவீடாக சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத்அலி, திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்பரசன், ஒன்றிய ஆணையர் சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கீழ்வேளூர்  
  கீழ்வேளூர் தாலுகாவில் கீழ்வேளூர், தேவூர், கீழையூர், வேளாங்கன்னி வருவாய் சரகங்கள் உள்ளன. நேற்று நடந்த ஜமாபந்தியில் தேவூர் சரகத்துக்கு உட்பட்ட 17 கிராமங்களின் வருவாய் கணக்குகள் தணிக்கை  நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நாகை வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் தாசில்தார் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.  நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வருவாய் கணக்கு தணிக்கையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் சான்றிதழ்களை 10 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
முதியோர் உதவித்தொகை
மேலும் தேவூர் வருவாய் சரகத்துக்கு உட்பட்ட 4 நபர்களுக்கு பட்டா மாறுதல் உட்பிரிவு செய்த ஆணையையும், 2 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையையும் கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், கண்காணிப்பாளர் ராஜேந்திரன், மண்டல துணை தாசில்தார் சுதர்சன், துணை தாசில்தார் துர்காபாய், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story