திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு
திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு.
திருவாரூர்,
திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா தலைமை தாங்கினார். அப்போது திருக்கண்ணமங்கை சரகத்துக்கு உட்பட்ட நெய்க்குப்பை, செம்மங்குடி, தீபங்குடி, கீரங்குடி, புலவநல்லூர், மணக்கால், அம்மையப்பன், வடகண்டம், திருக்கண்ணமங்கை, அகரத்திருநல்லூர், காட்டூர், இலவங்கார்குடி உள்பட கிராம மக்களிடம் இருந்து இணையதளம் மூலம் பெறப்பட்ட பட்டா மாறுதல், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
மீதி உள்ள மனுக்கள் தொடர் நடவடிக்கையில் உள்ளது. மேலும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருவாரூர் தாசில்தார் நக்கீரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் குணசீலி, ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் சொக்கநாதன், நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் கவிதா, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் இருந்தனர்.

Related Tags :
Next Story