கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தி வணிகர்கள் போராட்டம்


கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தி வணிகர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2021 11:53 PM IST (Updated: 23 Jun 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

ஜவுளி, நகை, அடகு கடைகளை திறக்க வலியுறுத்தி வணிகர்கள் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

ஜவுளி, நகை, அடகு கடைகளை திறக்க வலியுறுத்தி வணிகர்கள் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜவுளி, நகை மற்றும் அடகுகடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கைகளை அரசின் கவனதுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் கடைகளின் முன்பு கோரிக்கை பதாகைகளை ஏந்தி கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று வேலூர் மாவட்டத்தில் நகை, ஜவுளி கடைகள் முன்பு போராட்டம் நடந்தது. வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் வணிகர்கள் வரிசையாக தங்களது கடைகள் முன்பு நின்றிருந்தனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி அங்குள்ள முக்கிய தெருக்களில் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

'இந்த போராட்டத்துக்கு வணிகர் சங்க மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமை தாங்கினார். ஜவுளி வணிகர்சங்க தலைவர் ஏ.வி.எம்.குமார், நகை அடகு கடை வணிகர்கள் சங்க செயலாளர் ரமேஷ்குமார், வணிகர் சங்க இளைஞர் அணி செயலாளர் அருண்பிரசாத், நகர செயலாளர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

---

Next Story