விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
நொய்யல்
வேலாயுதம்பாளையத்தில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 60). கூலி தொழிலாளியான இவர், கடந்த 3 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் பல்வேறு மருத்துவமனையில் காண்பித்தும் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த பழனியப்பன் நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story