தமிழ் புலிகள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ் புலிகள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்
தேனி மாவட்ட தமிழ் புலிகள் அமைப்பு மாவட்ட துணைச் செயலாளர் திருநாவுக்கரசு படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், படுகொலை செய்த குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ் புலிகள் அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இளம் புலிகள் செயலாளர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ், துணை செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தாந்தோணி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story