கல்லாபுரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து வருகின்றன.
கல்லாபுரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து வருகின்றன.
தளி,
கல்லாபுரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து வருகின்றன.
காட்டுப்பன்றிகளின் அட்டகாசம்
தளி, அமராவதி சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணை, கிணறு, ஆழ்குழாய் கிணறு, வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை ஆதாரமாக கொண்டு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கிணற்றுப்பாசனத்தை ஆதாரமாக கொண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
3 மாதம் தீவிர பராமரிப்புக்கு பின்பு பயிர்கள் தற்போது அறுவடை நிலையில் உள்ளது. இந்த நிலையில் கல்லாபுரம் அருகே செல்வபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுப்பன்றிகள் கடந்த சில நாட்களாக மக்காச்சோள பயிர்களை நாசம் செய்து வருகிறது.
விவசாயிகளுக்கு நஷ்டம்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள நீர் இருப்பு, நீர்வரத்தை ஆதாரமாகக்கொண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்தோம். அதைத்தொடர்ந்து 3 மாதங்களாக பயிர்களை தீவிரமாக பராமரித்து வந்தோம். இதனால் அவை நல்ல முறையில் வளர்ந்து வந்ததுடன் பயிர்களில் கதிர்கள் பிடித்து முற்றி அறுவடை தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கூட்டம் கூட்டமாக வருகின்ற காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நிவாரணம்
எனவே கால்லாபுரம் அருகே செல்வபுரம் பகுதியில் மக்காச்சோள பயிர்களை நாசம் செய்து வருகின்ற காட்டுப்பன்றிகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story