பெருமாநல்லூரில் கர்ப்பிணி மனைவியை உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது


பெருமாநல்லூரில் கர்ப்பிணி மனைவியை உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது
x
தினத்தந்தி 23 Jun 2021 7:41 PM GMT (Updated: 2021-06-24T01:11:07+05:30)

பெருமாநல்லூரில் கர்ப்பிணி மனைவியை உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது

பெருமாநல்லூர், 
பெருமாநல்லூரில் கர்ப்பிணி மனைவியை உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.  அவர் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து குடும்பம் நடத்தியது  தெரியவந்துள்ளது. 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இளம் பெண்
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 21). இவர் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது குடும்பத்துடன் கோபித்துக்கொண்டு திருப்பூர் வந்துள்ளார். பின்னர் பெருமாநல்லூரில் மனோகரன் என்பவர் வீட்டில் தனியாக தங்கி திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். 
வேலை முடிந்து தினமும் பனியன் நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு ஆட்டோ மூலம் வரும்போது ஆட்டோ டிரைவர் கவுதம் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனால் லட்சுமி 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 
உயிரோடு எரித்து கொல்ல முயற்சி
அதன்பின்னர் கவுதம், கவுதமின் தந்தை, மற்றும் கவுதமின் பெரியப்பா ஆகியோர் லட்சுமியிடம் கர்ப்பத்தை கலைக்குமாறு பிரச்சினை செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் லட்சுமி இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். 
இந்த நிலையில் கடந்த 17.3.2019 அன்று  வீட்டில் இருந்த லட்சுமி மீது கவுதம் டீசலை  ஊற்றி தீயை பற்ற வைத்துவிட்டு, வீட்டை வெளிபக்கமாக சாத்தி விட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகி்றது. பின்னர் மீண்டும் திரும்ப வந்த கவுதம் அங்கு தீயில் காயம் அடைந்து கிடந்த லட்சுமியை மீட்டு ஆட்டோ மூலம் அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.  பின்னர்  மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனையில் லட்சுமி சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் விசாரிக்க சென்றபோது லட்சுமி நினைவின்றி இருந்துள்ளார். அங்கு லட்சுமியுடன் தங்கி இருந்த கவுதம், அவர் குணமாகும் முன்பே ஆஸ்பத்திரியில் தனியாக விட்டு விட்டு வந்து விட்டதாக கூறப்படுகிறது. 
அதன்பின்னர் குணமான லட்சுமி  ஆதரவற்ற நிலையில் கோவையிலுள்ள தனியார் காப்பகத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில் கவுதம் வேறொரு வடமாநில பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாக வசிப்பது லட்சுமிக்கு தெரியவந்தது. 
கைது
இதையடுத்து தன்னை ஏமாற்றிய கவுதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லட்சுமி பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கவுதமை கைது செய்து  சிறையில் அடைத்தனர். 

Next Story