ஜவுளி கடைகளுக்கு ‘சீல்’


ஜவுளி கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 23 Jun 2021 7:44 PM GMT (Updated: 2021-06-24T01:14:04+05:30)

அருப்புக்கோட்டையில் ஊரடங்கு விதிகளை மீறிய ஜவுளி கடைகளுக்கு தாசில்தார் சீல் வைத்தார்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை பகுதிகளில் விதிமுறைகளை மீறி ஜவுளி வியாபாரம் செய்யப்படுவதாக தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் பிருதிவிராஜ் மற்றும் வருவாய் துறையினர் மெயின் பஜார், சத்தியமூர்த்தி பஜார் ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள 4 ஜவுளி கடைகளில் விதிமுறைகளை மீறி ஜவுளி வியாபாரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 4 ஜவுளி கடைகளுக்கு சீல் வைத்ததுடன், தலா ரூ.5,000 அபராதம் விதித்தார்.

Next Story